Home > மருத்துவம் > எளிய மருத்துவக் குறிப்புகள் – 34. சில நோய்களும் மருந்துகளும்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 34. சில நோய்களும் மருந்துகளும்…

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் வலிமை பெற: அருகம்புல் சாறு, தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

அஜீரணம் சரியாக: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி(Ginger), சீரகம்(Cumin) இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால்(Milk) சேர்த்து சாப்பிட்டால் நிறைய பலன் கிடைக்கும்.

சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை(Radish) சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.

படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம்(Lemon) பழச்சாற்றில் உரைத்து தடவிவர விரைவில் குணமாகும்.

மலச்சிக்கல்: செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி: மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் (Oil) காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு: சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்: வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்: கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்: வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு: ஒரு துண்டு சுக்கை(Dry ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்: எலுமிச்சம் பழசாறு(Lemon Juice), தேன்(Honey) கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

You may also like
எளிய மருத்துவக் குறிப்புகள் – 50. இஞ்சி சாறு…
எளிய மருத்துவக் குறிப்புகள் – 49. தேள், தேனீ – விஷப்பூச்சிகளின் கடி
எளிய மருத்துவக் குறிப்புகள் – 48. கர்ப்ப கால வயிற்று வலிக்கு…
எளிய மருத்துவக் குறிப்புகள் – 47. வேம்பின் மருத்துவக் குணங்கள்

Leave a Reply