Home > செய்திகள் > 2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்

2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அதன் படி, தேர்தலை எதிர்நோக்கி பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையமும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த நவ.16ம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

அதில், திருத்தம் மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று 2ம் நாளாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமில் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் புதிதாக பெயர் சேர்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?
கரை கடந்து வட தமிழக தரை பகுதிக்குள் நுழைந்த நிவர்
பாஜக கூட்டணி முன்னிலை

Leave a Reply