Home > செய்திகள் > பாதிப்பில் தமிழகம் 7-வது இடம்; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது…இதுவரை 934 பேர் பலி

பாதிப்பில் தமிழகம் 7-வது இடம்; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது…இதுவரை 934 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1543 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 934 பேர் உயிரிழந்த நிலையில், 6,868 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 369 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1282 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 3548 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 162 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 394 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. நேற்று வரை 6-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 1937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1101 பேர் குணமடைந்துள்ளனர். மாநில வாரியாக விவரம்: அசாமில் 36 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 27 பேர் குணமடைந்தது. பிகாரில் 345 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது. சண்டிகரில் 40 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது. சத்தீஸ்கரில் 37 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது. கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது. டெல்லியில் 3108 பேருக்கு பாதிப்பு; 54 பேர் பலி; 877 பேர் குணமடைந்தது. அரியானாவில் 296 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 183 பேர் குணமடைந்தது. திரிபுராவில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது. கேரளாவில் 481 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 355 பேர் குணமடைந்தது. ராஜஸ்தானில் 2262 பேருக்கு பாதிப்பு; 46 பேர் பலி; 669 பேர் குணமடைந்தது. ஜார்கண்டில் 82 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது. லடாக்கில் 20 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது. மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது. மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது. மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது. ஒடிசாவில் 118 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது. பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 3 பேர் குணமடைந்தது. நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது. பாஞ்சாப்பில் 313 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 71 பேர் குணமடைந்தது. உத்தரகண்ட்டில் 51 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது. கர்நாடகாவில் 512 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 193 பேர் குணமடைந்தது. ஜம்மு காஷ்மீரில் 546 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 164 பேர் குணமடைந்தது. தெலுங்கானாவில் 1004 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது. மேற்கு வங்கத்தில் 697 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 109 பேர் குணமடைந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 1183 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 235 பேர் குணமடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் 2168 பேருக்கு பாதிப்பு; 110 பேர் பலி; 302 பேர் குணமடைந்தது. உத்தரப்பிரதேசத்தில் 1955 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 335 பேர் குணமடைந்தது. அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது. இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது. அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
குளிரை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் தவித்து வருகின்றனர்

Leave a Reply