Home > அரசியல் > தமிழக அரசின் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
தமிழ்நாடு வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2021-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வரும் திங்கள் அன்று பொதுவிவாதம் நடைபெறும் அப்போது பேசலாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தியும், நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.
பட்ஜெட் உரையில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.

மாநிலத்தின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்.

திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் தொழில்துறை அலகுகளுக்காக 60 எம்.எல்.டி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும்.

தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

25 கலை கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு 10 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு ஆளில்லா விமான கழகமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.

மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.% ஆக உள்ளது. 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.20 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்.

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.

ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது.

வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய அறிக்கை தயார் செய்யப்படும்.

1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.

2,200 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்.

ரூ.17,899.17 கோடி நெடுஞ்சாலைகள் துறைக்கு ஒதுக்கீடு. புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு. 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.

புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்.

கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

2021 – 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கொடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ரூ.87 கோடி செலவில் திட்டம்.

உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு.

சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும்.

கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.

8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும். ஒன்றிய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

ரூ.2000 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்.

குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு.

உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

மீன்வளத்துறைக்கு ரூ.1149.79 கோடி ஒதுக்கீடு.

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607 கோடி ஒதுக்கீடு.

பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.

30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைக்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.

நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு, அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.

தேவையுள்ள இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்.

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது, இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு.

போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.

1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.

தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும். உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கலைஞர் ‘செம்மொழி தமிழ் விருது’ ரூ.10 லட்சம் பரிசுடன் இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.

அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்ஜெட் உரையில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம்.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் – நிதியமைச்சர்
6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு இந்த பட்ஜெட் பொருந்தும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண்மைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.

தலைநிமிரும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது; மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ. 10.35ஆக இருந்தது தற்போது ரூ. 32.9ஆகவும் டீசல் மீதான வரி ரூ. 3.57ல் இருந்து ரூ. 31.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும்.

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதை கண்காணிக்க ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.

2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.

You may also like
குடிமக்கள் பற்றி அரசு அறிய தனி செயலி – முதல்வர் பார்வைக்கு ஒரு யோசனை!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் : வரலாறு படைத்தது மு.க.ஸ்டாலின் அரசு!!
புதிய விவசாயக் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு : வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
கலைஞர் பிறந்த நாளுக்கு பெருவிழாக்கள் வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

Leave a Reply