Home > தொடர்கள் > வளமான வாழ்க்கைக்கு தேவையான பழரசங்கள்! (1)

வளமான வாழ்க்கைக்கு தேவையான பழரசங்கள்! (1)

“எனக்கு ஐஸ் கிரீம்னா ரொம்ப இஷ்டம்” “எனக்கு நொறுக்குத் தீனி இருந்தா போதும்” “சாக்லெட் இருந்தா எனக்கு வேற எதுவுமே தேவையில்லை” நம்மில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துக்கள் அடங்கிய பழங்களையோ, காய்கறிகறிகளையோ விரும்பி சாப்பிடுவதில்லை. அதிலும், சமீப காலமாக ஃபா°ட் ஃபுட் ரொம்பவும் பிரபலமாகிவிட்டது. உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் சுவையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை சாப்பிடும் போக்கு அதிகரித்துள்ளது. காய்களும் பழங்களும் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்றாட உணவில் பழங்களையும், பழரசங்களையும் தவறாது நாம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அவற்றில் உள்ள இயற்கை சத்துக்களை அழிக்காமல் உட்கொண்டால் நோய்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வயிறு நிறைய சாப்பிட்டும் கிடைக்காத சத்துகள் ஒரு கிளா° பழச்சாறில் கிடைக்கும். உடலும் உள்ளமும் தெளிவாக இருக்கும் என்றெல்லாம் இப்போது டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பழங்களை சாப்பிடுவதற்கும், பழச்சாறு வகைகளை குடிப்பதற்கும் வயது தடையே இல்லை. வயதில் இளமையாக இருந்தாலும் சரி. முதுமை அடைந்தவராக இருந்தாலும் சரி. தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் பழரசம் பருகுவதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும். செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடுவிளைவிக்கும். இதன் விளைவாக உடலில் கூடுதலாக அமிலங்களை சுரக்கக் கூடும். தினமும் ஃப்ரஷ்ஷாக உள்ள இயற்கையான பழங்களின் சாறுகளை குடிக்க வேண்டும். ஃப்ரஷ்ஷாக கிடைக்கும் பழரசங்களில் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சத்துகள்தான் சரி செய்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. பழச்சாறுகளை குடிப்பதால் நமது தோல் மினுமினுப்பாகவும், பளபளப்பாகவும் மாறும். பழச்சாறுகள் நமது உடலில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும், நமது திசுக்களில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கவும் உதவுகின்றன. சர்க்கரைநோய், செரிமானக் கோளாறுகள் (வாந்தி, பேதி, வாயுத் தொந்தரவுகள், அசிடிட்டி), ஆ°துமா மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச நோய்களும் மேலும் பல்வேறு நோய்களும் சரியான உணவு முறையைக் கடைப்பிடிக்காததால் ஏற்படுகின்றன. சரியான அளவில் சத்துகளை சேர்ப்பது அவசியம். புரதச் சத்துள்ள உணவுகளை கூடுதலாக உட்கொள்ளுதல், கார்போஹைட்ரேட், மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுதல், சரியான அளவு நீரை உட்கொள்ளாமல் தவிர்ப்ப போன்ற முறையற்ற உணவு பழக்கங்களினால் நோய்கள் தாக்குகின்றன. நோய்த்தாக்குதலை தடுக்க பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை உடலுக்கு தக்கவாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பனிக்காலங்களில் (குளிர்காலம்), காரட் சாறுடன் கீரை மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிடலாம். அதனுடன் இஞ்சியும் சேர்க்கலாம் சளித் தொந்தரவு உள்ளவர்கள் எலுமிச்சை சாறை தவிர்த்து இஞ்சி சேர்க்கலாம்.
You may also like
பழங்களில் அடங்கியுள்ள முக்கிய சத்துக்கள்
பழங்களில் அடங்கியுள்ள முக்கிய சத்துக்கள்
வளமான வாழ்க்கைக்கு தேவையான பழரசங்கள்! (2)

Leave a Reply