Home > முகப்பு > புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக திமுகவின் போராட்டத் திட்டம் என்ன?

புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக திமுகவின் போராட்டத் திட்டம் என்ன?

கிட்டத்தட்ட நாமும் பஞ்சாபியரும் ஒரே உணர்வுள்ளவர்கள் என்பது எனது கருத்து.
இரு மாநிலங்களுமே உழைப்பில் உயர்ந்தவை. சுயமரியாதையைக் காப்பாற்றவே உருவான ஒரு மதம் என்றால் அது சீக்கிய மதம்தான்.

தங்களுடைய உரிமைக்கு ஏதேனும் தடை வந்தால் அதற்காக உயிரைக் கொடுத்துப் போராடும் மன உறுதியும் சீக்கியர்களுக்கு உண்டு.

1989 ஆம் ஆண்டு வாராது வந்த மாமணியாய் திமுக ஆட்சிக்கு வந்தது. சீக்கிரமே உயிரைப் பறிப்பார்கள் என்று முன்கூட்டியே தெரிந்ததோ என்னவோ, அவசர கதியில் கலைஞர் தனது சிந்தனையில் உதித்த அத்தனை திட்டங்களையும் அறிவித்தார்.

மாணவ்ர்களுக்கு இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் என்று அனைத்தையும் நிறைவேற்றினார். அவருடைய வேகத்துக்கு அன்றைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஈடுகொடுத்தார்.

தமிழகத்தில் இலவச மின்சாரத் திட்டம் நிறைவேற்றப்பட்ட உடன், உடனடியாக பஞ்சாபில்தான் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

சமூகநீதி, மக்கள் நலன் என்று பார்த்துப்பார்த்து செய்த கலைஞர் ஆட்சியைக் கலைக்க நடந்த முயற்சியை ஏற்க மறுத்து தனது பதவியையும் துறந்தவர் பர்னாலா.

அவருடைய மாநிலத்தில் இன்றைக்கு புதிய விவசாய மசோதவை எதிர்த்து பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த அகாலிதளமும், காங்கிரஸும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் கொடியேந்தி வீரநடை போடுவதைப் பார்த்து உலகமே உறைந்து நிற்கிறது.

இந்தியா முழுவதும் மிகப்பெரிய தொடர் போராட்டத்தை விவசாயிகளும் தொழிலாளர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஆறு மாதங்கள் தங்கிப் போராட திட்டமிட்டு புறப்பட்ட அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் செய்ய மத்திய மோடி அரசு திட்டமிட்டு தடைகளை ஏற்படுத்துகிறது.

தடையை மீறி, விவசாயிகளும் தொழிலாளர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் போராடும் இந்த நேரத்தில் திமுகவும் தனது பலத்தை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்…

You may also like
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!
கலைஞரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருள்!
மோடியின் புல்லட் புரூஃப் காரை தளபதி ஏற்கக் கூடாது! – Athanurchozhan

Leave a Reply