Home > மருத்துவம் > எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறோம். சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்

Leave a Reply