Home > மருத்துவம் > தினமும் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பல வகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துகள் கொண்டதாக இருக்கின்றன. ஒரு சில பழங்கள் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, நோய் நொடிகளை நீக்குகின்றன. பிளம்ஸ் பழம் அப்படிப்பட்ட பழ வகைகளுள் ஒன்று

வாய்ப் புற்றுநோய்

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது.

சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித்தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது.

மன அழுத்தத்தைப் போக்க

ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்குவதோடு, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கக்கூடியது.

கண்பார்வையை தெளிவுற

கண்பார்வையை தெளிவுறச் செய்யும் சக்தி பிளம்ஸுக்கு உண்டு. இதயத்திற்கு சிறந்த டானிக், சிவப்பு நிற பிளம்ஸ் பழங்கள். இளவயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால், உடல் புத்துணர்வு பெறும்.

சிறுநீரகம்

நமது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு பொருட்களையெல்லாம் வடிகட்டி சிறுநீரக உடலில் இருந்து வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன.

பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்.

தலைமுடி

பிளம்ஸ் பழங்கள் தலைமுடிக்கு பல வகைகளில் நன்மைகளை புரிகிறது. இந்த பழங்களில் தலைமுடி உதிர்வை தடுக்கும் வைட்டமின் ஏ சத்துகள் அதிகம் உள்ளதால் முடிகொட்டுவதை தடுக்கிறது.

பொடுகு போன்றவை தலையில் உருவாகாமலும் தடுக்கிறது. தலைமுடிகளின் அடர்த்தியும் கூடுகிறது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கும் பிரச்சனையையும் போக்குகிறது.

Leave a Reply