பச்சைப் பட்டாணியில் அதிகமான வைட்டமின்
பி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. கீரை உணவுகளில் அதிகம் காணப்படும் வைட்டமின்
கே மற்றும் தானியங்களில் காணப்படும் வைட்டமின் பி ஆகிய சத்துகளை கொண்டுள்ளது
பட்டாணி.
இந்த பச்சைப் பட்டாணியை சாப்பிட்டால் வயிறு தொடர்பான புற்றுநோய்
வராமல் தடுக்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை
கட்டுப்படுத்துகிறது.
மேலும் பட்டாணியில் உள்ள புரதசத்து, நார்சத்து, கால்சியம்
ஆகியவை உடலுக்கு நல்ல எனெர்ஜியை தரும். பட்டாணியை வறுத்து சாப்பிடுவதை விடவும்
அவித்து, வேகவைத்து
சாப்பிடுவது உடலுக்கு நல்லது.