Home > மருத்துவம் > அல்சர் பிரச்சனையை எளிமையான வீட்டு வைத்தியம்

அல்சர் பிரச்சனையை எளிமையான வீட்டு வைத்தியம்

தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.

 * காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜீஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்னையிலிருந்து விடுபடலாம். 

* மற்றொரு சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான், நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில்  வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்னை சரியாகும். 

* பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு  நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. 

* வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் அருமருந்து என்று சொல்லகூடியது அகத்திக்கீரை. கசப்பு மிகுந்த அகத்திக்கீரையில் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புகள், மாவுசத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகள் உண்டு.

Leave a Reply