Home > மருத்துவம் > மஞ்சளின் மகிமைகள்

மஞ்சளின் மகிமைகள்

மஞ்சளின் மகிமைகள்

மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

மஞ்சளின் வகைகள்:

மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் “ஆலப்புழை மஞ்சள்” உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

முட்டா மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

விரலி மஞ்சள்

கரிமஞ்சள்

நாக மஞ்சள்

காஞ்சிரத்தின மஞ்சள்

குரங்கு மஞ்சள்

குடமஞ்சள்

காட்டு மஞ்சள்

பலா மஞ்சள்

மர மஞ்சள்

ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் இயல்புகள்

முட்டா மஞ்சள்

இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

கஸ்தூரி மஞ்சள்:

இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள்:

இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

மஞ்சளின் பயன்பாடுகள்:

சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கழுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

மேலதிக தகவல்கள்:

மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதி தரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.

You may also like
தர்ப்பைப்புல் மகிமை
துளசியின் மகிமை
தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது
தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்
தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்

Leave a Reply