Home > மருத்துவம் > தண்ணீரின் மகிமை

தண்ணீரின் மகிமை

முன்னொரு காலத்தில் ஜப்பானில் முதியவர் ஒருவர் வாழ்ந்தார்.

முதியவர் என்றாலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்.

அவரைப் பார்த்த பேராசிரியர் ஒருவருக்கு ஆச்சர்யம்.

அவரிடமே போய்க் கேட்டுவிட முடிவு செய்தார்.

“ஐயா, உங்களுக்கு எத்தனை வயது?”

“95”

“உங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே…”

“அப்படியானால் தண்ணீருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்”

“தண்ணீருக்கா?”

பேராசிரியருக்கு வியப்பு அதிகரித்தது. தண்ணீர் ரகசியத்தை அறிந்துகொள்ள ஆசைப்பட்டார்.

அவருடைய ஆசையை முதியவரும் புரிந்துகொண்டார்.

“நான் இளமையில் குடல் சுருங்கி படுத்த படுக்கையாக கிடந்தேன். எந்த வைத்தியமும் எனக்கு பலனளிக்கவில்லை. அப்போதுதான் மருத்துவர் ஒருவர் தண்ணீர் வைத்திய முறையை பரிந்துரை செய்தார். அதை நான் கடைப்பிடித்தேன். அதன்பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. நான் நோயின்றி வாழ்கிறேன்…

“அந்த வைத்திய முறையக் கடைப்பிடிக்கத் தொடங்கிய முதல்நாளிலேயே நன்றாக பசியெடுத்தது. ஜீரணசக்தியில் முன்னேற்றம் தெரிந்தது. ஒருவேளை நான் முன்பே எடுத்த வைத்தியங்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தண்ணீர் வைத்திய முறையை பின்பற்ற தொடங்கியவுடன்தான் எல்லாம் சரியானது. எனது குடும்பத்தினருக்கும் நான் சந்திக்கும் நோயாளிகளுக்கும் இந்த தண்ணீர் வைத்திய முறையை விளக்கினேன். அவர்களும் பலனடையத் தொடங்கினர்”

இப்படிச் சொன்ன முதியவர், அந்த வைத்திய முறையையும் சொன்னார்.

“தண்ணீருக்கு இவ்வளவு மகிமையா?” என்று பேராசிரியர் வியந்துபோனார்.

தண்ணீர் வைத்திய முறை என்றால் என்ன?

இரவு உணவை 7 மணி அளவில் சாப்பிட்டுவிட வேண்டும். அதன்பிறகு, 3 மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும்.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து, வழக்கம் போல முகம் கழுவுவது, வாய் கொப்புளிப்பது எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக வசதியாக அமர்ந்து போதுமான இடைவெளி விட்டு 6 டம்ளர் சுத்தமான தண்ணீரை பருகவேண்டும். சேர்ந்தாற்போல தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தால் சிறிது இடைவெளிவிட்டு மூன்று டம்ளர் தண்ணீரை பருகலாம்.

தண்ணீர் குடித்தபிறகு 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை மேற்கொண்ட 20 முதல் 30 நிமிடங்களில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

எந்த உந்துதலும் இல்லாம்ல் அதிக அளவில் சிறுநீர் பிரியும். சில சமயம், சிலருக்கு கசடுகள் வாந்தியாகவும் வெளிவரும். மலச்சிக்கலும் தீரும்.

இவ்வாறு உடலில் உள்ள கழிவுகள் இலகுவாக வெளியேறுவதால் உங்கள் உடல் புத்துணர்வு பெறும்.

You may also like
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு
மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைவு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு

Leave a Reply