கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரமாக முன்னேற்பாடு ஏதும் செய்யாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
வீட்டை விட்டு வெளியே வந்தால் போலீஸ் தொல்லை அதிகரித்துள்ள நிலையிலும், மறுபக்கம் கொரோனா நோய் தொற்றுக்கு உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மக்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தால் அவர்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் வசித்தாலும் அவர்கள் இருக்கும் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுப்பார்கள் என்று உதயநிதி கூறியிருக்கிறார். இதற்காக அவர் 9361863559 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி ட்வீட் செய்திருக்கிறார்.
இந்த சேவை செம்மையாக நடைபெற்றால் இது ஒரு புதிய முயற்சியாக கருதப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.