Home > செய்திகள் > இந்தியா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் ஸ்மித் பங்கேற்பாரா?

இந்தியா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் ஸ்மித் பங்கேற்பாரா?

பயிற்சியிலிருந்து விலகி பயிற்சியிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்தியா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் டெஸ்டுக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவந்த ஸ்டீவ் ஸ்மித், ஸ்மித்துக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறி, ஓய்வறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுதொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே அவுஸ்ரேலிய அணியில் டேவிட் வோர்னர் முதல் டெஸ்டிலிருந்து விலகினார். பிறகு மற்றொரு தொடக்க வீரருமான வில் புகோவ்ஸ்கியும் விலகினார்.

இதையடுத்து வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து அவர் விலகினார். தற்போது, அவருக்கு பதிலாக ஹென்றிகஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்பிறகு சகலதுறை வீரர் கேம்ரூன் கிரீனுக்குக் காயம் ஏற்பட்டது. அவர் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை மறுதினம் அடிலெய்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply