Home > செய்திகள் > உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்! ஊடக அறம் எங்கே சென்றது – சாக்ஷி தோனி

உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்! ஊடக அறம் எங்கே சென்றது – சாக்ஷி தோனி

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அரசாங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, பிரபலங்கள் பலரும் தங்கள் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்களின், சச்சின் டெண்டுல்கர், ரூ. 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். கங்குலி ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை விநியோகம் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் முகக் கவசங்களை தயாரித்து கொடுத்திருக்கின்றனர்.

இன்னும் பல விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி, ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்ததாக இன்று சமூக தளங்களில் செய்திகள் வெளியானது. சில ஊடகங்களும் இதனை செய்தியாக ஒளிபரப்பின.

இதைத் தொடர்ந்து, சாக்ஷி தோனி தனது ட்விட்டரில், “இதுபோன்ற முக்கியமான நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்! உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்! ஊடக அறம் எங்கே சென்றது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply