Home > அரசியல் > உங்கள் தவறை மறைக்க இஸ்லாமியர்கள்தான் கிடைத்தார்களா?

உங்கள் தவறை மறைக்க இஸ்லாமியர்கள்தான் கிடைத்தார்களா?

தமிழகத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற சிவராத்தி நிகழ்வு குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்களின் மாநாட்டில் வெளிநாட்டினர் பங்கேற்ற நிகழ்வு எதிர்விமர்சனமாக உருவெடுத்தது.

அந்த மாநாடு மார்ச் 13 முதல் மார்ச் 15 ஆம் தேதிவரைதான் நடைபெற்றது. ஆனால், மாநாடு முடிவடைந்து 15 நாட்கள் ஆன நிலையில், மார்ச் 30 ஆம் தேதி அந்த மாநாட்டை குறைசொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

மார்ச் 13 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா வைரஸ் இன்னும் அவசரகால நிலைக்குச் செல்லவில்லை என்று அறிவித்ததை மறைத்துவிட்டு பேசுகிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டெல்லி மாநில அரசு, மார்ச் 16 ஆம் தேதிதான் பொது நிகழ்வுகளுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகுதான் மக்கள் ஊரடங்கை மார்ச் 19 ஆம் தேதி மோடி பிறப்பிக்கிறார். அதைத்தொடர்ந்துதான் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கும் அறிவிக்கப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் வைரஸ் பரவும் என்று டெல்லி அரசு இப்போது சொல்கிறது. ஆனால், மாநாட்டில் பங்கேற்ற 10 இந்தோனேஷியர்களும் ஹைதரா பாத்தில் மார்ச் 16 ஆம் தேதியே தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

டெல்லி மாநில அரசின் மார்ச் 16 தடை உத்தரவு நகல்

மார்ச் 18 ஆம் தேதி அந்த பத்து பேரில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர்களை தவிர வேறு சிலருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மார்ச் 21 ஆம் தேதி தமிழகம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களும் டெல்லி மதகுரு மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதுதொடர்பாக மாநில அரசு மத்திய சுகாதாரத்துறை என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்டு தகவலை அனுப்பியது.

ஆனால், மார்ச் 31 ஆம் தேதி இந்த மாநாட்டில் பங்கேற்ற 1033 பேரை சோதித்ததில் 24 பேருக்கு தொற்று இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தடையே இல்லாத சமயத்தில் மாநாடு கூட்டியவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவுசெய்யவும் உத்தரவு போட்டிருக்கிறார்.

You may also like
சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்
டிக் டாக் பிரபலமான ஷாகேப் கான் கொரோனா வைரஸை பரப்புவதாக பாஜக புரளி!
25 ஆண்டுகளில் 3 கோடி மக்களை கொன்ற தொற்று நோய்களின் சகாப்தம் நமக்கு சொல்வது என்ன?

Leave a Reply