Home > செய்திகள் > உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, உலகத்தில் பத்திரிகை துறையினருக்கு அதிக ஆபத்துள்ள நாடுகளின் வரிசையை அறிக்கையாக பட்டியலிட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய நாடுகளின் வரிசையில் ஈராக் முதல் இடம் வகிக்கிறது.

அந்நாட்டில், 340 பத்திரிகையாளர்கள் கடந்த 30 ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மெக்சிகோ (178 பேர்), பிலிப்பைன்ஸ் (178 பேர்) மற்றும் பாகிஸ்தான் (138 பேர்) ஆகிய நாடுகள் உள்ளன.

நடப்பு 2020ம் ஆண்டில் குண்டு வெடிப்புகள், எல்லை கடந்த தாக்குதல் சம்பவங்கள், குறிவைத்து தாக்குதல் ஆகியவற்றில் 15 நாடுகளை சேர்ந்த 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவற்றில் மெக்சிகோ (13 பேர்) முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து பாகிஸ்தான் (5 பேர்), பிலிப்பைன்ஸ், சோமாலியா மற்றும் சிரியா ஆகியவை (தலா 2 பேர்) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.

இதேபோன்று கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்திய துணை கண்டத்தில் அமைந்த பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வந்துள்ளன.

ஆசிய பசிபிக் பகுதியில் 40 சதவீதம் படுகொலைகள் பாகிஸ்தானிலேயே நடந்துள்ளன என அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.

Leave a Reply