Home > செய்திகள் > உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்தது குவாலியர்

உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்தது குவாலியர்

உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் போபால்: மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும், உலக அளவிலான சுற்றுலா நகரங்களின் வரிசையில் சேர்க்கப்பட உள்ளதாக மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரிய நகரப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் மூலம் குவாலியர், ஓர்ச்சா நகரங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.

யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்குப்பின், யுனெஸ்கோவும், மாநில சுற்றுலாத் துறையும் இணைந்து இந்த இரு நகரங்களையும் மேலும் அழகுபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.

குவாலியர் கோட்டை 9 – ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இந்த ராஜ்ஜியத்தை குர்ஜார் பிரதிஹார் ராஜ்வன்ஷ், தோமர், பாகேல் கச்வாஹா, சிந்தியா ஆகியோரால் ஆளப்பட்டது. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச்சின்னங்கள், கோட்டைகளிலும், அரண்மனைகளிலும் இன்றும் ஏராளமாகக் காணப்படுகின்றன. குவாலியர் நகரம், அரண்மனைகள், கோயில்களுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. இங்குள்ள சாஸ் பாஹு கா கோயில் அரிய வகையில் செதுக்கப்பட்ட கட்டுமானக் கலைக்கு உதாரணமாக விளங்குகிறது.

குவாலியர் கோட்டை நகரத்தில் சமணர் சிலைகளும், உயரமான கோட்டைச் சுவர்களும் உள்ளன. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குஜாரி மகால் அரண்மனை தொல்பொருள் அருங்காட்சியகமாகக் காட்சியளிக்கிறது.

இதேபோல ஓர்ச்சா நகரத்திலுள்ள கோயில்களுக்கும் அரண்மனைகளும் பிரபலமானவை. 16 ஆம் நூற்றாண்டில் புண்டேலா ராஜ்ஜியத்தின் தலைநகராக ஓர்ச்சா திகழ்ந்தது.

Leave a Reply