Home > அரசியல் > எல்லைகளை அடைத்துவிட்டு விரட்டினால் எங்கே போவோம்?

எல்லைகளை அடைத்துவிட்டு விரட்டினால் எங்கே போவோம்?

ஒருபக்கம் முதலாளிகள் தங்கள் இடத்திலிருந்து விரட்டுகிறார்கள். மறுபக்கம் போக்குவரத்தை அரசு முடக்குகிறது. நடந்தே ஊருக்கு போகலாம் என்றால், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் பூட்டப்பட்டு, போலீஸாரின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

பிழைக்க வந்த மாநிலத்திலும் தங்கமுடியாமல், சொந்த மாநிலத்திற்குள்ளும் நுழைய முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேற திறந்து வைக்கப்பட்ட பஸ்நிலையங்களை மூடும்படி மார்ச் 29 ஆம் தேதி முதல்வர் யோகி ஆதித்தியநாத் உத்தரவுபோடுகிறார்.

பஸ் நிலையம் திறந்திருக்கும் என்று வந்தவர்களை போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள். வேறு வழியே இல்லாமல் சிறு குழந்தைகளோடும் வயதானவர்களோடும் சாலை வழியே பயணத்தை தொடர்கிறார்கள். ஆனால், டெல்லி மாநில எல்லையை நெருங்கும்போது, “எங்கேயிருந்து வந்தீர்களோ அங்கேயே போய்விடுங்கள் என்று போலீஸார் தடுத்து நிறுத்துகிறார்கள்” என்று கதறுகிறார்கள் தொழிலாளர்கள்.

“இதுவரைக்கும் எங்களுக்கு உணவு ஒரு பிரச்சனையாக இல்லை. பயண வழியில் ஏராளமான நல்ல உள்ளங்கள் எங்கள் பசியை ஆற்றுகிறார்கள். ஆனால், போலீஸ்தான் எங்களை தடுத்து விரட்டுகிறார்கள். நீங்களே சொல்லுங்க, நாங்க எங்கேதான் போவோம்?” என்கிறார்கள்.

எட்டு மாத கர்ப்பினி ஒருவர், “மூன்று குழந்தைகளோடு, காஸியாபாத்தில் உள்ள எனது தங்கை வீட்டுக்கு போகலாம் என்று இங்கே வந்தோம். ஆனால், பஸ் இல்லை. திரும்பிப் போகும்படி சொல்லி போலிஸ் மிரட்டுகிறது. டெல்லி போலீஸ் எப்படி எங்களை அனுமதிக்கும்? பக்கத்தில் உள்ள கோவிலில் தங்கலாம் என்று சிலர் சொன்னார்கள். கோவிலுக்குள் அனுமதி கிடைக்குமா தெரியவில்லை” என்று கண்ணீர் சிந்துகிறார்.

You may also like
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
எட்டு நிமிடம் கூட தாக்குப் பிடிக்காத சங்கிகளின் பொய்கள்

Leave a Reply