Home > செய்திகள் > ஒலிம்பிக்கில் முதன்முறையாக… பிரேக்டேன்சிங் நடன போட்டி!

ஒலிம்பிக்கில் முதன்முறையாக… பிரேக்டேன்சிங் நடன போட்டி!

பாரீஸ் நகரில் வரும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடிவாகியுள்ளது. இதில், முதல் முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக்டேன்சிங் ஒரு போட்டியாக சேர்க்கப்படவுள்ளது.

இதற்காக பிரேக்டேன்சிங்கில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களில் 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்து கொள்வார்கள்.

இதனால் ஒலிம்பிக் போட்டியை காண அதிகளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஸ்கேட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய போட்டிகளும் முதன்முறையாக நடத்தப்படும்.

இதனை தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இந்த போட்டிகள் தொடரும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயல் வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply