Home > செய்திகள் > கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு; இதுவரை 2,293 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு; இதுவரை 2,293 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,500-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3604 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,293 பேர் உயிரிழந்த நிலையில், 22,455 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 868 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,786 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 8541 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 513 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2780 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் நேற்று முதல் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2051 பேர் குணமடைந்துள்ளனர். மாநில வாரியாக விவரம்: அசாமில் 65 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது. பீகாரில் 747 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 377 பேர் குணமடைந்தது. சண்டிகரில் 174 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது. சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 53 பேர் குணமடைந்தது. கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது. டெல்லியில் 7233 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2129 பேர் குணமடைந்தது. அரியானாவில் 730 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 337 பேர் குணமடைந்தது. திரிபுராவில் 152 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது. கேரளாவில் 519 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 489 பேர் குணமடைந்தது. ராஜஸ்தானில் 3988 பேருக்கு பாதிப்பு; 113 பேர் பலி; 2264 பேர் குணமடைந்தது. ஜார்கண்டில் 160 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 78 பேர் குணமடைந்தது. லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது. மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது. மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது. மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது. ஒடிசாவில் 414 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 85 பேர் குணமடைந்தது. பாணடிச்சேரி 12 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது. நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது. பாஞ்சாப்பில் 1877 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 168 பேர் குணமடைந்தது. உத்தரகாண்ட்டில் 68 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது. கர்நாடகாவில் 862 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 426 பேர் குணமடைந்தது. ஜம்மு காஷ்மீரில் 879 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 427 பேர் குணமடைந்தது. தெலுங்கானாவில் 1275 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 800 பேர் குணமடைந்தது. மேற்கு வங்கத்தில் 2063 பேருக்கு பாதிப்பு; 190 பேர் பலி; 499 பேர் குணமடைந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 2018 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 975 பேர் குணமடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் 3785 பேருக்கு பாதிப்பு; 221 பேர் பலி; 1747 பேர் குணமடைந்தது. உத்தரப்பிரதேசத்தில் 3573 பேருக்கு பாதிப்பு; 80 பேர் பலி; 1758 பேர் குணமடைந்தது. அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது. இமாச்சலப்பிரதேசத்தில் 59 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது. அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது. தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply