Home > செய்திகள் > கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றியும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் முதல்-மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது.

இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் பேசுகையில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்திற்கு வரும் சர்வதேச பயணிகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

கர்நாடக மாநிலத்தில் பரவுவதை தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இரவு 10 மணிக்கு மேல் எந்தவொரு நிகழ்ச்சிகளோ அல்லது விழாக்களோ கொண்டாடக் கூடாது. இது கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று கூறினார்.

Leave a Reply