Home > செய்திகள் > கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தற்கொலை

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தற்கொலை

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை குறித்து தர்மேகவுடா கடிதம் எழுதி வைத்து இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனது வீட்டில் இருந்து சாண்ட்ரோ காரில் வெளியே சென்ற தர்மேகவுடா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

உறவினர்களும் உதவியாளர்களும் அவரை தேடினர் அவரது உடல் சிக்கமகளூரு மாவட்டத்தின் கதூர் தாலுகாவில் குணசாகரா பகுதியில் கண்டெடுக்கபட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

தர்மே கவுடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply