Home > செய்திகள் > கறுப்புக் கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

கறுப்புக் கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கறுப்புக் கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் அரசு அறிவித்தபடி அங்கு மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் போராட்டம் தொடர்பாக தங்களை வந்து சந்திக்கவில்லை என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply