Home > செய்திகள் > காங்கிரசுடன் கூட்டணிக்கு கமல் கட்சி தீவிர முயற்சியா?

காங்கிரசுடன் கூட்டணிக்கு கமல் கட்சி தீவிர முயற்சியா?

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியோடு, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அ.தி.மு.க, தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.

குறிப்பாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியோடு, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது,

சட்டமன்ற தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவாக காலூன்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக கூடுதல் இடங்களை கேட்டு பெற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாற்று அரசியலை முன்னெடுக்கும் கமல் கட்சியோடு, காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் தொடர்பில் உள்ளனர் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, தி.மு.க.வோடு நீண்ட கால நட்புடனும், இணக்கத்தோடும் இருந்து வருகிறோம். தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் நீடிக்கும். கமல்ஹாசன் கட்சியோடு கூட்டணி சேர வாய்ப்பு இல்லை.

Leave a Reply