Home > செய்திகள் > குளிக்கும்போது போனை பயன்படுத்திய பெண்ணுக்கு நடந்த கதி!

குளிக்கும்போது போனை பயன்படுத்திய பெண்ணுக்கு நடந்த கதி!

ரஷ்யாவில் குளிக்கும்போது ஐபோனை பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண் ஒலேஸ்யா செமனோவா (24) குளியல் தொட்டியில் பேச்சு மூச்சின்றி கிடந்ததைக் கண்ட அவரது அறைத்தோழியான டாரியா, அவரை தட்டி எழுப்ப முயன்றுள்ளார்.

அப்போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. பின்னர் ஒலேஸ்யாவின் ஐபோன் தண்ணீருக்குள் கிடப்பதையும், அது சார்ஜருடன் இணைக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் அவரது தோழி அவதானித்துள்ளார்.

ஒலேஸ்யா தனது ஐபோன் சார்ஜ் ஆகும்போதே, குளித்துக்கொண்டே அதை பயன்படுத்தியுள்ளார். மொபைல் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி அவர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே, குளிக்கும்போது மொபைல் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply