Home > செய்திகள் > கேரளாவில் பரவும் புதிய நோய் : ஒருவர் உயிரிழப்பு!

கேரளாவில் பரவும் புதிய நோய் : ஒருவர் உயிரிழப்பு!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால், சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோயின் அறிகுறிகளாக லேசான வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் ஜெயஸ்ரீ கூறும்போது, ‘இந்த பகுதியில், ஷிகெல்லா பக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே, நோயினால் பாதிகக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறும்போது, ‘சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவு மூலம் இந்த நோய் ஏற்படுவதாக தெரிகிறது.

ஓரிரு நாட்களில் சுகாதார முகாம் நடத்தப்பட்டு, நோய் தொற்றுக்கான காரணங்கள் கண்டறியப்படும். மக்கள் சுகாதாரத்தை கடைப்பிடித்தால், இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply