Home > செய்திகள் > கொரோனாத் தடுப்பூசி போடுவதற்குத் தயங்கும் நபர்களுக்கு..? : ஹர்ஷவர்தன் பதில்

கொரோனாத் தடுப்பூசி போடுவதற்குத் தயங்கும் நபர்களுக்கு..? : ஹர்ஷவர்தன் பதில்

இந்தியாவில் ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

“ இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்ளிட்ட 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநிலம், மாவட்டம் அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம்.

முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தடுப்பூசி போடுவதற்கு தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply