Home > செய்திகள் > கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?

கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?

கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது. ஆரம்பத்திலேயே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்திருக்கும். மருத்துவத்துறை, தூய்மை பணியாளர்கள், மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் குறித்து அதிக அக்கறையுடனும், துரிதமாகவும் இந்தியா செயல்பட்டிருக்கும். இந்தியாவில் இந்நோய் பரவாது என்று மேம்போக்காக இருந்ததன் விளைவு இன்று நாம் பொருளாதார சிக்கல்களை சந்திக்க வழி செய்துள்ளது.

கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் அம்மாநில நடந்து கொண்டது தான் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக சென்றடைய காரணமாக அமைந்தது. மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் முதல்வர் பினராயி விஜயனே நேரில் அறிவிக்கிறார். மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டுகிறது அம்மாநில அரசு.

You may also like
கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா
கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி
மாதா அமிர்தானந்த மயி ஒளித்து வைத்த வெளிநாட்டவர்கள் கைது!

Leave a Reply