Home > செய்திகள் > ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் – கனிமொழி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் – கனிமொழி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார்.

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, நெல்லை மத்திய மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் கட்டுவதாக சொல்லி மணல் திருட்டு நடந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு அரசுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே காண்ட் ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் அதனை சந்திக்க தயராக இருக்குறோம்.

கொரோனா காலகட்டத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறார் . மக்கள் பணிகள் செய்வது தான் தலையாயக் கடமை. அதனை ஸ்டாலின் செய்து வருகிறார். தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

ஜனவரியில் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவு பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது.

திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமேயும் மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

Leave a Reply