Home > செய்திகள் > ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் வாகனங்கள் மோதி தீப்பிடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியா நாட்டின் மேற்கே அமைந்த குவாரா மாநிலத்தில் இலோரின் என்ற பகுதியருகே, இடோபியான்-இலோரின் சாலையில் சென்று கொண்டிருந்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் 27 பேர் சிக்கி கொண்டனர். 10 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களில் 9 பேர் அடையாளம் தெரியாத அளவில் எரிந்து உள்ளனர்.

16 பேருக்கு பல்வேறு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. ஒருவர் காயம் எதுவுமின்றி தப்பி உள்ளார்.

இதுபற்றி குவாராவின் மத்திய சாலை பாதுகாப்பு படையின் பிரிவு அதிகாரி ஜோனாதன் ஓவோயேட் கூறும்பொழுது, வேக கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாகனங்கள் சென்றதும் மற்றும் தவறான முறையில் வாகனங்களை கடந்து செல்ல முயன்றதும் விபத்து ஏற்பட வழிவகுத்து உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply