மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.
இந்நிலையில் தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதேபோல தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிகப்பட்டும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியதால் இதற்கு தற்போது காவல் துறை பதில் அளித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஒன்று ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கூறியதை எண்ணி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்யானதே. ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.