Home > செய்திகள் > ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனின் மிக நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லூசியாணா மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான செட்ரிக் ரிச்மண்ட், ஜோ பிடனின் புதிய அரசாங்கத்தால் அவருக்கு முதுநிலை ஆலோசகர் பதவியை பொறுப்பேற்பதற்காக தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவிருந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜோர்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் நடைபெற்ற செனட் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய இரு நாட்களுக்குப் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகிள்ளது.

ஜோ பிடனை ரிச்மண்ட், அண்மையில் நேரில் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜோ பிடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

Leave a Reply