அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை திறக்க ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை திறக்க ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் ஆற்றுகரை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை நேற்று திறக்கப்பட இருந்தது.
இந்தநிலையில் அருணாசலபுர பகுதி பொதுமக்கள் சுந்தர்ராசு தலைமையில் நாகுடி கடைவீதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் இன்னொரு தரப்பினர் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று கூறி நாகுடி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிததும், ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.