Home > செய்திகள் > டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்!!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்!!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய உயர் மட்ட குழு அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பஞ்சாப் விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் லண்டன் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

மேலும் 30-க்கு மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கோவிட் -19 விதிகளை மீறியதற்காக பலரை போலீசார் கைது செய்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply