Home > செய்திகள் > தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் கியூபா வங்கி

தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் கியூபா வங்கி

அமெரிக்கா தனது தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் கியூபாவில் ஒரு வங்கியை சேர்த்துள்ளது.

நிதி நிறுவனம் கியூப இராணுவத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்றும் அதன் இலாபங்கள் வெனிசுலாவில் நாட்டின் குறுக்கீட்டிற்கு நிதியளிக்க உதவுகின்றன என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளுது.

தடைசெய்யப்பட்ட பட்டியலில் பாங்கோ ஃபைனான்சியோ இன்டர்நேஷனல் எஸ்.ஏ (பி.எஃப்.ஐ) வங்கியே சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகார எல்லைக்கு உட்பட்ட எவரும் பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையை மறுத்தார்.

‘கியூபாவுக்கு எதிரான முற்றுகையை கடுமையாக்குவது அமெரிக்க வெளியுறவுத்துறையின் தண்டனை நடவடிக்கை’ என்று டுவீட் செய்தார்.

‘கியூப நிறுவனங்களை அதன் பட்டியல்களில் சேர்ப்பது 62 ஆண்டுகளுக்குப் பிறகு கியூப புரட்சியை அழிக்கத் தவறிய பொருளாதார முற்றுகையை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது’ என்று ரோட்ரிக்ஸ் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply