Home > செய்திகள் > தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா தனிமைப்படுத்தப்படுவாரா?

தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா தனிமைப்படுத்தப்படுவாரா?

பெங்களூரில் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் வரும் ஞாயிறு அன்று தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்துவிட்டு மீண்டும் களமிறங்கினாா் ரோஹித் சா்மா.

முழுமையாக குணமடையாத நிலையிலேயே அவா் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதாக கூறப்படுகிறது. அவா் தலைமை வகித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

இந்த நிலையில் பெங்களூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் ரோஹித் சர்மா அங்கிருந்து தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குச் செல்கிறார். அங்கு 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்.

இதனால் 2-வது டெஸ்ட் வரை அவரால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 7 மற்றும் ஜனவரி 15 ஆகிய தேதிகளில் தொடங்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply