Home > செய்திகள் > தமிழகத்தில் இன்று போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு

தமிழகத்தில் இன்று போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு

தமிழகத்தில் போலீஸ் பணிக்கு இன்று எழுத்து தேர்வு 499 மையங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணிவரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த ஆண்டு மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 ஆண்களும், 3 ஆயிரத்து 99 பெண்களும், திருநங்கையர்களும், சிறப்பு காவல்படை பிரிவில் 6 ஆயிரத்து 545, சிறைத்துறைக்கு 119 அவற்றில் ஆண்கள்-112, பெண்கள்-7, தீயணைப்புத்துறைக்கு 458 ஆண்கள் என 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை போலீசார் தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.

இது குறித்து தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 35 மையங்களில் 29 ஆயிரத்து 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நேரம் காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணிவரை ஆகும். தேர்வு கண்காணிப்பு பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ சார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா காலக்கட்டம் பயணிப்பதால் தேர்வு எழுதுவோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை என்று தமிழகஅரசு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply