Home > செய்திகள் > தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ்

தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ்

தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 50 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மக்களிடையே பரவி வருகிறது.

இந்தி எதிர்ப்பு குறித்து டீசர்ட் அணிந்து சமீபத்தில் திரையுலகினர் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் இந்தி தெரியாவிட்டால் லோன் கிடையாது என்று வங்கி மேனேஜர் ஒருவர் கூறியதாக எழுந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் தேர்தலில் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை பயன்படுத்த ஒரு சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்து ஹிந்தியில் மெசேஜ் வருவதாக ஒரு சில பயணிகள் குற்றம் சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுவரை தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட்டுகளை புக் செய்தால் பயணிகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு ஹிந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகளின் நலச்சங்கம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்திக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் இந்த விஷயத்தையும் அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

You may also like
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்
2021 ஜனவரி மாதம் முதல் ‘தங்கரதம்’
இன்று முதல் இயங்குகிறது மின்சார ரயில்சேவை
சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

Leave a Reply