சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 57 வயது பெண் சென்னையில் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் திருச்சி சென்று வந்தவர். சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடைப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.