Home > செய்திகள் > தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆனது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆனது

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அத்தியாவசிய பணிகள் தவிர அலுவலகங்கள் செயல்படாது என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் கோரோனா வைரஸாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில், மதுரை, திருப்பூர் நபர் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை புரசைவாக்கம், திருப்பூர், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply