தலாய்லாமா தேர்வு குறித்த அமெரிக்க அரசின் அறிவிப்புக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தலாய் லாமா என்பது புத்த மதப் பிரிவின் தலைமை பதவியை குறிக்கும் என்பதும் இந்த தலாய்லாமா திபெத்தியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது
புத்த மத நம்பிக்கைப்படி தலாய்லாமா அவதார புருஷராக கருதப்படுவார் என்றும் ஒரு தலாய்லாமா இறந்தவுடன் அதே நொடியில் பிறந்த குழந்தையை தான் அடுத்த தலாய்லாமாவாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மறைந்த தலாய்லாமாவே உயிரோடு வந்ததாக கருதப்படுவது இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் அடுத்த தலாய்லாமாவை தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்தியர்களுக்கே என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்த தலாய்லாமாவை சீன அரசுதான் தேர்ந்தெடுக்கும் என்று அந்நாட்டின் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தலாய்லாமாவை தேர்ந்தெடுக்கும் உரிமை குறித்து அமெரிக்க அரசின் அறிவிப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தலாய்லமா தேர்வு குறித்து அமெரிக்கா அரசு அறிவித்துள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது