Home > செய்திகள் > தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்திக்கிறார்.

முதல்வரை சந்தித்து தாயாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் நிகழும் இந்த சந்திப்பில், ஸ்டாலின் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின். தாயாரின் மறைவையொட்டி கடந்த ஒருவார காலமாக சேலம் இல்லத்தில் இருந்த முதல்வர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார்.

கடந்த வாரம் முதல்வர் தாயார் தவுசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதி சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. முதல்வரின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like
நிவர் நிவாரண பணிகள் – கடலூரில் முதல்வர் சென்னையில் துணை முதல்வர்
ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் – அமித்ஷாவை தெறிக்க விட்ட ஸ்டாலின்!
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
பாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்! – bjp vs dmk

Leave a Reply