Home > அரசியல் > திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

சென்னை: இந்தியாவில், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.

எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனது பணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்த பின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாய் தயாளுஅம்மாள் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வ யோசனைகளை வழங்குவோம் என மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார். மேலும், ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் டி. ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

You may also like
நிவர் நிவாரணம் துரிதப்படுத்தபடவேண்டும் – மு.க.ஸ்டாலின்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?
நிவர் நிவாரண பணிகள் – கடலூரில் முதல்வர் சென்னையில் துணை முதல்வர்

Leave a Reply