Home > செய்திகள் > திருகோணமலையில் பறந்து கொண்டிருந்த விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

திருகோணமலையில் பறந்து கொண்டிருந்த விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

இலங்கை – திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது

PT 6 என்ற பயிற்சி விமானத்துடனான தொடர்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், விமானம் இறுதியாக சூரியபுர பகுதியில் பறந்ததாகவும் இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஸ்ரீலங்கா விமனப்படையின் ஊடக பேச்சாளரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான விமானம் கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply