Home > செய்திகள் > திருமணம் முடிந்த 5 நாளில் வேறொரு திருமணம் செய்த புதுமாப்பிள்ளைக்கு போலீஸார் வலைவீச்சு

திருமணம் முடிந்த 5 நாளில் வேறொரு திருமணம் செய்த புதுமாப்பிள்ளைக்கு போலீஸார் வலைவீச்சு

ஒரு வாரத்திற்குள் இரண்டு பெண்களை திருமணம் செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரேதசத்தில் இந்தூரில் வசிக்கும் 26 வயது மென்பொறியாளர் ஒருவரே, இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இவர் கடந்த 2-ஆம் திகதி Khandwa-வில் ஒரு பெண்ணையும், 7-ஆம் திகதி Mhow-விலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

முதல் திருமணம் ஆன ஐந்து நாட்களுக்குள் இரண்டாம் திருமணம் செய்த இந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை Khandwa-வில் வசிக்கும் பெண் குடும்பத்தால் அளித்த புகாரின் அடிப்படையில், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் வீட்டார் கொடுத்திருக்கும் புகாரில், தங்கள் உறவினர் ஒருவர் இந்தூரில் இருக்கும் Mhow-வில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு ஏற்கனவே தங்கள் மகளை திருமணம் செய்த நபர், மாப்பிள்ளை கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அப்பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் கடந்த 7-ஆம் திகதி தங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் இது தொடர்பாக போலீசார் தகுந்த விசாரணை மேற்கொள்ளும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரளித்துள்ள பெண்ணின் குடும்பத்தார், குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பி ஓடியுள்ள மணமகனுக்கு 10 லட்சம் ரூபாய் அளவில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply