Home > செய்திகள் > தீவிரமாகும் புதிய வகை வைரஸ்: சர்வதேச ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

தீவிரமாகும் புதிய வகை வைரஸ்: சர்வதேச ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

பிரிட்டனில் வலுப்பெற்றுவரும் புதிய வகை வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச ரீதியாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த வைரஸானது வேகமாக (70 சதவீதம் அதிகம்) பரவக்கூடிய அபாயம் உடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் காணப்படுவதற்கான எவ்வித ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரிட்டனுடனான போக்குவரத்து தொடர்புகளை இடைநிறுத்தம் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமையினை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி காலத் தலைவர் மைக் ரயான், ‘பெருந்தொற்றுக்களின் போதான புதிய வகைப் பரவல்கள் வழக்கமான ஒன்று எனினும் குறித்த நெருக்கடி நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனுடன் தொடர்புடைய விமான சேவைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஏறக்குறைய 40 நாடுகள் இடை நிறுத்தியுள்ளன.

மேலும் குறித்த நெருக்கடி நிலை தொடர்பான பொது வழிமுறை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பேசிவருகிறது.

அதேவேளை டென்மார்க்கிலும் குறித்த வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து அந்நாட்டுடனான போக்குவரத்து சேவையினை சுவீடன் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply