Home > செய்திகள் > தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: வெளியான அதிர்ச்சி வீடியோ உள்ளே

தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: வெளியான அதிர்ச்சி வீடியோ உள்ளே

தென் ஆப்பரிக்கா தலைநகரில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ள சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டர்பனில் உள்ள ஏங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வெடி விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டர்பன் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 1,20,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply