Home > செய்திகள் > தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி உட்பட 2 பேர் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி உட்பட 2 பேர் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை தாலுகா அகலகோட்டை அருகே உள்ள குடிமந்தை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 31). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (23). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply