Home > செய்திகள் > தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறும்.

இந்நிலையில் தேவரின் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அத்துடன் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

You may also like
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் – ஸ்டாலின்
அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்
காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்
கமல் ஹாசன் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Leave a Reply